உக்ரைன்: கூட்டத்தில் திடீரென கையெறி குண்டுகளை உருட்டி விட்ட கவுன்சிலர்

ரஷியாவுடனான போரையடுத்து, உக்ரைன் மக்கள் பலரிடமும் ஆயுதங்கள் காணப்படுகின்றன.

Update: 2023-12-16 19:06 GMT

கீவ்,

உக்ரைனின் மேற்கு பகுதியில் கீரத்ஸ்கை கிராம கவுன்சிலின் தலைமையகத்தில் கடந்த வெள்ளி கிழமை காலை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக உறுப்பினர்கள் வந்து அமர்ந்திருந்தனர்.

கூட்டத்தில், காரசார விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, கருப்பு உடையில் உள்ளே நுழைந்த கிராம கவுன்சிலர் திடீரென தன்னிடம் இருந்த 3 கையெறி குண்டுகளை வெளியே எடுத்து, அதனை தரையில் உருட்டி விட்டார்.

இதனால், கூட்டத்தில் இருந்தவர்கள் அலறினர். எனினும், அந்த குண்டுகள் வெடித்து விட்டன. அந்த பகுதி முழுவதும் புகை பரவியது. இந்த சம்பவத்தில், 26 பேர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கையெறி குண்டுகளை வீசிய நபரின் சுவாசிப்பும் நின்று விட்டது. இதனால், மருத்துவர்கள் அவருக்கு உயிர் மூச்சை கொடுப்பதற்கான சிகிச்சையும் அளித்தனர். ரஷியாவுடனான போரையடுத்து, உக்ரைன் மக்கள் பலரிடமும் ஆயுதங்கள் காணப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்