ஆன்மிகத் துளிகள்

இறைவனை அனுபவத்தின் மூலமாகத்தான் உணர முடியும். அவ்வாறு அனுபவத்தின் மூலம் அறிந்த பிறகு, இறைவனே ஜீவனாகவும், பிரபஞ்ச நாயகனாகவும் இருப்பதை அறிய முடியும்.

Update: 2017-03-14 01:00 GMT
ஞானம்

இறைவனை அனுபவத்தின் மூலமாகத்தான் உணர முடியும். அவ்வாறு அனுபவத்தின் மூலம் அறிந்த பிறகு, இறைவனே ஜீவனாகவும், பிரபஞ்ச நாயகனாகவும் இருப்பதை அறிய முடியும். அகண்ட வெளியாக இருக்கும் அவனே, இந்த உலகமாகவும், உயிர்களாகவும் ஆகியுள்ளான். இறைவனும், அவன் பக்தர்களும் நிலவும் நட்சத்திரங்களும் போன்றவர்கள்.

–ராமகிருஷ்ணர்.

உணர்வு

‘உலகில் எல்லா மனிதரும், தம்மைத் தாமே உணரட்டும். எனக்கு அது கிடைக்காது போனால் கவலையில்லை. அவர்கள் அதனைப் பெற நான் உதவி செய்தால் போதும்’ என்று ஒருவர் சொன்னால் அது, ‘கனவில் உள்ள அனைவரும் எனக்கு முன்பாக விழிக்கட்டும்’ என்று கனவு காண்பவர் சொல்வதைப் போன்றது. அவரது பேச்சு அர்த்தமற்றது.

–ரமணர்.

எதிர்பார்ப்பு

சுதந்திரமாக இருங்கள். எவரிடத்திலும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் உங்களது கடந்த கால வாழ்க்கையை நீங்கள் பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால், அதில் நீங்கள் வீணாக எப்போதும் மற்றவர்களிடம் இருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும், அவர்கள் எதுவும் தராமல் போனதையும் தான் காண்பீர்கள்.

–விவேகானந்தர்.

மேலும் செய்திகள்