ஆன்மிகம்
திருமண வரம் தரும் ஈசன்

இந்த சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டால் திருமண வரம் விரைவில் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். இந்த ஆலயத்தின் நுழைவு வாசல் அருகில் மேற்கு பக்கம் கிழக்கு நோக்கியபடி சிவன் கோவில் ஒன்று இருக்கிறது. இங்கு சுந்தரேஸ்வரர்– கல்யாணி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இந்த சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டால் திருமண வரம் விரைவில் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இறைவனுக்கு எதிர்புறம் சனீஸ்வரர், சொர்ண ஆகர்‌ஷண பைரவர், விநாயகர் ஆகியோர் ஒரே வரிசையில் வீற்றிருப்பது சிறப்புக்குரியதாகும்.