ஆன்மிகம்
இந்த வார விசே‌ஷங்கள் 25–4–2017 முதல் 1–5–2017 வரை

25–ந் தேதி (செவ்வாய்)*போதாயன அமாவாசை.*ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவில் ரத உற்சவம்.*வண்டியூர் மாரியம்மன் கோவில் ரத ஊர்வலம். *ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
25–ந் தேதி (செவ்வாய்)

*போதாயன அமாவாசை.

*ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவில் ரத உற்சவம்.

*வண்டியூர் மாரியம்மன் கோவில் ரத ஊர்வலம்.

*ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

*சமநோக்கு நாள்.

26–ந் தேதி (புதன்)

*அமாவாசை.

*சென்னை சென்னகேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் விடையாற்று உற்சவம்.

*திருக்கண்ணபுரம் சவுரி
ராஜப் பெருமாள் விபீ‌ஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

*வண்டியூர் மாரியம்மன் கோவில் தீர்த்தவாரி.

*சமநோக்கு நாள்.

27–ந் தேதி (வியாழன்)

*திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சீராளக் கறி நைவேத்தியம்.

*திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் புஷ்பாங்கி சேவை.

*திருப்போரூர் முருகப்பெருமான் கோவிலில் அபிஷேகம்.

*செம்பனார் கோவிலில் சூர்ணாபுரீஸ்வரர் பவனி வருதல்.

*வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.

*கீழ்நோக்கு நாள்.

28–ந் தேதி (வெள்ளி)

*கார்த்திகை விரதம்.

*ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

*மதுரை மீனாட்சி சொக்க நாதர் சித்திரை பெருவிழா தொடக்கம், சுவாமி– அம்பாள் கற்பக விருட்ச, சிம்ம வாகனத்தில் வீதி உலா.

*திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பவனி.

*வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.

*கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

*கீழ்நோக்கு நாள்.

29–ந் தேதி (சனி)

*அட்சய திருதியை.

*சதுர்த்தி விரதம்.

*நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் உற்சவம் தொடக்கம்.

*நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.

*மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பூத, அன்ன வாகனத்தில் திருவீதி உலா.

*தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவில் உற்சவம் ஆரம்பம்.

*மேல்நோக்கு நாள்.

30–ந் தேதி (ஞாயிறு)

*முகூர்த்த நாள்.

*பாளை திரிபுராந்தீஸ்வரர் கோவில் உற்சவம் தொடக்கம்.

*உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி பூத வாகனத்தில் வீதி உலா.

*ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் அன்ன வாகனத்தில் பவனி.

*மதுரை மீனாட்சி சொக்க நாதர் கயிலாய, காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.

*திருச்சி தாயுமானவர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.

*சமநோக்கு நாள்.

1–ந் தேதி (திங்கள்)

*உழைப்பாளர் தினம்.

*சஷ்டி விரதம்.

*மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தங்கப் பல்லக்கு உற்சவம்.

*தூத்துக்குடி பாகம்பிரியாள், திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாடல் ஊட்டும் நிகழ்ச்சி.

*திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம்.

*மேல்நோக்கு நாள்.