ஒற்றுமை தரும் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் காமரசவல்லி என்ற ஊரில் உள்ளது கார்கோடேஸ்வரர் கோவில். இந்த ஆலயம் கடக ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாக விளங்குகிறது.

Update: 2017-05-23 08:23 GMT
ஞ்சாவூர் மாவட்டத்தில் காமரசவல்லி என்ற ஊரில் உள்ளது கார்கோடேஸ்வரர் கோவில். இந்த ஆலயம் கடக ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாக விளங்குகிறது. ரதி தேவிக்கு சிவபெருமான், மாங்கல்ய பாக்கியம் அருளிய தலம் இதுவாகும். எனவே இங்கு வந்து இறைவன் கார்கோடேஸ்வரரையும், இறைவி காமரசவல்லி தாயாரையும் வேண்டிக்கொண்டால் பிரிந்த தம்பதியர் சேருவார்கள். கணவன்–மனைவி இடையே ஒற்றுமை பலப்படும் என்கிறார்கள். இந்த ஊரில் ஒவ்வொரு ஆண்டும் காமன் பண்டிகை நடத்தப்படுகிறது. இந்த விழாவின் போது இரண்டாக வெட்டிய ஆமணக்கு செடியை நட்டு வைப்பார்கள். இருப்பினும் இந்தச் செடி, 8 நாட்களுக்குள் மீண்டும் தழைத்து விடு கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் காமரசவல்லி ஊர் உள்ளது.

மேலும் செய்திகள்