சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் தொடங்கியது
வைகாசி வசந்த உற்சவ நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் பூஜைகள் நடைபெற உள்ளன.;
மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலைமேல் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி உற்சவம் சண்முக அர்ச்சனையுடன் தொடங்கியது. இந்த விழா 9-ம் தேதி திங்கள்கிழமை வரை நடைபெறும்.
விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் பூஜைகள் நடைபெற உள்ளன. காலை 11 மணிக்கு சண்முகருக்கு சண்முகார்ச்சனையும், மாலை 3 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை 5 மணிக்கு கோவில் உள் பிரகாரத்தில் மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடும் நடைபெறும். மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தில் மகா தீபாராதனை நடைபெறும்.