ஆன்மிகம்
நடனமாடும் தட்சிணாமூர்த்தி

திருப்பாற்றுத்துறை ஆலயத்தின் கருவறை சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி, வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ளது திருப்பாற்றுத்துறை என்ற ஊர். இங்கு ஆதி மூலேஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தின் கருவறை சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி, வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரது இடது கால் சற்றே மடங்கி நளினமாக நடனமாடும் கோலத்தில் உள்ளது. இந்த தட்சிணாமூர்த்தியின் அருகில் அவரது பிரதான சீடர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.