மதுரை கூடல் நகர் அழகர் பெருமாள் கோவில் தேரோட்டம்
வைகாசி பெருந்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
மதுரை கூடல் நகர் பகுதியில் அழகர் பெருமாள் கோவில் உள்ளது. கூடல் நகர் அழகர் பெருமாள் கோவில் 108 வைணவ தேசங்களில் 47வது தலமாக திகழ்கிறது.
இந்நிலையில், இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
தெற்குமாசி வீதி சந்திப்பில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜபெருமாள் தேரில் எழுந்தருளினார். தேரோட்ட நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றும் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.