மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரம்

மாட்டுப்பொங்கல் அன்று கோ பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும்.

Update: 2018-01-10 08:10 GMT
வீட்டுப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும். 15.1.2018 அன்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அல்லது அதிகாலை 6 மணி முதல் 7 மணிக்குள் மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரமாகும். கோ பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். இதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும். அன்றைய தினம் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து மாடுகளின் கழுத்தில் பூமாலையும், கரும்பு மாலையும் கட்டி வழிபடுவது நல்லது.

நைவேத்தியத்தில் கொஞ்சம் நம் குடும்ப உறுப்பினர்கள் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான், சலிக்காது உழைத்து வாழும் குணம் நம்மை வந்து சேரும். நமக்கு உற்ற தோழனாய் இருந்து உன்னத வாழ்விற்கு அடிகோலும் மாடுகளை வணங்கி மகிழ்வோம்.

பரங்கி இலை அல்லது வாழை இலையில் பொங்கலை வைத்து மாட்டிற்கு பிரசாதமாக வழங்குவது உத்தமம். அன்றைய தினம் அதிகாலையில் சகல சிவாலயங்களிலும் நந்திக்கு உணவு மாலை அணிவிப்பார்கள். அந்த அலங்காத்தைக் கண்டு ரசித்து வழிபட்டால் நலங்களும், வளங்களும் வந்து சேரும். 

மேலும் செய்திகள்