மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் திருவிழா

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

Update: 2018-03-24 22:42 GMT
சென்னை,

விழாவையொட்டி கிராம தேவதையான கோலவிழி அம்மன், விநாயகர் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மயில் வடிவத்தில் அம்பாள் சிவபூஜை காட்சி மற்றும் புன்னை மரம், கற்பக மரம், வேங்கை மரம், சந்திர வட்டம், கிளி, பூதன், பூதகி, தாராகசுர வாகனங்களில் சாமி, அம்பாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது.

நேற்று கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளக்கரையில் ‘திருஞானசம்பந்தர் ஞானப்பால் விழா’ நடந்தது. இதையொட்டி அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

26-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு வெள்விடை பெருவிழாக்காட்சியும், 29-ந்தேதி மாலை 3.30 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவனும், 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் ஐந்து திருமேனிகள் திருவீதி உலா, பக்தி இன்னிசை, தேவாரப் பண்ணிசை, சிறப்பு நாதஸ்வர, விடையாற்றி சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்