சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. தரிசனம் செய்ய 5 முதல் 8 மணி நேரம் வரை காத்திருப்பு

சபரிமலை நடை திறந்து இதுவரை 42 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-07 08:07 IST

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்​பன் கோவி​லில் வரும் 14-ம் தேதி மகர​விளக்கு பூஜை நடை​பெற உள்​ளது. இதற்​காக கடந்த 30-ம் தேதி மாலை கோவில் நடை திறக்​கப்​பட்​டது. உற்சவ நிகழ்ச்​சிக்கு இன்​னும் ஒரு வாரமே உள்​ள​தால் பக்தர்​கள் கூட்​டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடை திறந்து இதுவரை 42 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இதன்படி சபரிமலை வழித்​தடங்​களில் இது​வரை இல்​லாத கூட்​டம் காணப்படுகிறது. எரி​மேலி​யில் இருந்து பெரு​வழிப்​பாதை, பம்​பை, கணபதி கோவில், மரக்​கூட்​டம், அப்​பாச்​சிமேடு, பெரிய நடைப்​பந்​தல் உள்​ளிட்ட பகு​தி​களி​லும் கட்​டுக்​கடங்​காத கூட்​டம் இருந்​தது. குறிப்​பாக சந்​நி​தானத்​தில் இருந்து மரக்​கூட்​டம் வரை ஒதுங்​கக்​கூட இடம் இல்​லாத நிலை​யில் நெரிசல் ஏற்​பட்​டது.

சபரிமலையில் அலைமோதும் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பக்தர்கள் 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்ய 5 முதல் 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பக்தர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கேரள ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து உடனடி தரிசன முன்பதிவு எண்ணிக்கை தினசரி 2 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.

இதனிடையே சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மகர ஜோதியை காண சன்னிதானம், பாண்டித்தாவளம் உள்ளிட்ட இடங்களில் இப்போதே தற்காலிக கூடாரங்கள் அமைத்து ஓய்வு எடுத்து வருகிறார்கள். இதனால் சன்னிதானம், பம்பை, மணப்புரம் போன்ற இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பம்பையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. நெரிசலை தவிர்க்க சாமி தரிசனம் முடித்த பக்தர்கள் உடனுக்குடன் மலையிறங்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்