பக்தர்கள் கவனத்திற்கு... திருப்பதியில் முன்பதிவு செய்த அன்றே தரிசனம்: நாளை மறுநாள் முதல் அறிமுகம்

தினமும் காலை 9 மணிக்கு ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.;

Update:2026-01-07 23:50 IST

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஸ்ரீவாணி டிரஸ்ட் தரிசன டிக்கெட்டுகளுக்கு ஆன்லைன் முன்பதிவு முறையை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தற்போது திருமலையில் கவுண்ட்டர்களில் வழங்கப்படும் 800 ஸ்ரீவாணி டிரஸ்ட் பிரேக் தரிசன டிக்கெட்டுகள் இனி ஆன்லைன் புக்கிங் மூலம் வழங்கப்படும். ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 500 ஆன்லைன் டிக்கெட் கோட்டாவுக்கு மேலாக இதுவும் அமலில் இருக்கும்.

தினமும் காலை 9 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்படும். மதியம் 2 மணி வரை முன்பதிவு செய்யலாம். அதே நாளில் மாலை 4 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு திருமலைக்கு வருகை தர வேண்டும். இந்த புதிய ஆன்லைன் முன்பதிவு முறை ஒரு மாதம் சோதனை முறையில் நடைமுறை படுத்தப்படுகிறது.

சோதனை கால முடிவில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் தரிசன நேரங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்த்து, இந்த ஆன்லைன் புக்கிங் வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்