தேவதைகள் நீராடிய நீர்வீழ்ச்சி

உத்தரகன்னடா மாவட்டம் முருடேஸ்வரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அப்சரா கோண்டா நீர்வீழ்ச்சி.

Update: 2018-07-18 10:00 GMT
மலையில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீரானது தடாகத்தில் தவழ்ந்து செல்லும் காட்சியை கண் இமைக்காமல் ரசித்து கொண்டே இருக்கலாம்.

இந்த நீர்வீழ்ச்சியில் வானில் உள்ள தேவதைகள் நீராடியதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. மேலும் இங்குள்ள மலைகளில் பெரிய, சிறிய பாண்டவர் குகைகள் காணப்படுகிறது.

இந்த குகைகளில் தான் பாண்டவர்கள் பதுங்கி வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருகே உள்ள உக்கிர நரசிம்ம கோவில், உயபா கணபதி கோவில், பசவேஸ்வர துர்கா மற்றும் ராமசந்திரபுரா மடம் போன்ற கோவில்களையும், காசர்கோடு கடற்கரையையும் கண்டு மகிழலாம்.

இந்த இடங்களை கண்டு ரசிக்க செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலம் சிறந்தது. 

மேலும் செய்திகள்