இந்த வார விசேஷங்கள் ; 29-10-2019 முதல் 4-11-2019 வரை

29-ந் தேதி (செவ்வாய்) சிக்கல் சிங்கார வேலவர் நாகாபரண காட்சி, இரவு ஆட்டு கிடா வாகனத்தில் திருவீதி உலா. திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை மஞ்சள் நீராட்டு விழா, இரவு விருட்சபாரூடராய் பட்டினப் பிரவேசம்.குமாரவயலூர் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.

Update: 2019-10-29 02:45 GMT
வள்ளியூர் முருகப்பெருமான் இரவு வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு.

உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.

கீழ்நோக்கு நாள்.

30-ந் தேதி (புதன்)

முகூர்த்த நாள்.

திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேய சுவாமிக்கு வருசாபிஷேகம்.

சிக்கல் சிங்கார வேலவர் காலை மோகன அவதாரம், இரவு தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.

வள்ளியூர் முருகப்பெருமான் காலை கேடய சப்பரத்திலும், இரவு பூங்கோவில் சப்பரத்திலும் பவனி.

குமாரவயலூர் முருகப்பெருமான் விருட்ச வாகனத்தில் பவனி.

சமநோக்கு நாள்.

31-ந் தேதி (வியாழன்)

சதுர்த்தி விரதம்.

சிக்கல் சிங்கார வேலவர் வேணுகோபாலர் திருக்கோலக் காட்சி, இரவு வெள்ளி விருட்ச வாகனத்தில் பவனி.

குமாரவயலூர் முருகப்பெருமான் கஜமுகசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.

வள்ளியூர் முருகப்பெருமான் காலை ஏக சிம்மாசனத்திலும், இரவு யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் வீதி உலா.

சமநோக்கு நாள்.

1-ந் தேதி (வெள்ளி)

முகூர்த்த நாள்.

சிக்கல் சிங்காரவேலவர் ரத உற்சவம், இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.

குமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுகசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.

வள்ளியூர் முருகப்பெருமான் சண்முக உருகு பலகையில் தரிசனம். மூலவர் சொர்ண அங்கி சேவை. இரவு ஏக சிம்மாசனத்திலும் பஞ்சமூர்த்தி அலங்காரத்துடனும் புறப்பாடு.

கீழ்நோக்கு நாள்.

2-ந் தேதி (சனி)

கந்தசஷ்டி விரதம், சூரசம்ஹாரம்.

சிக்கல் சிங்கார வேலவர் தங்க ஆட்டு கிடா வாகனத்திலும், தாரக மற்றும் சிங்கமுக அசுரர்களை சங்கரித்து, சூரபத்மனை சம்காரம் செய்து இந்திர விமானத்திலும் பவனி.

குமாரவயலூர் முருகப்பெருமான், பார்வதி தேவியிடம் சக்திவேல் வாங்குதல்.

வள்ளியூர் முருகப்பெருமான் வெள்ளை சாத்தி தரிசனம், மாலை பச்சை சாத்தி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.

கீழ்நோக்கு நாள்.

3-ந் தேதி (ஞாயிறு)

முகூர்த்த நாள்.

சகல முருகன் கோவில்களிலும் தெய்வானை திருக்கல்யாணம்.

சிக்கல் சிங்கார வேலவர் காலை சூர்ணோற்சவம், மாலை தங்கக் குதிரையில் பவனி, இரவு தெய்வானையை மணந்து வெள்ளி ரதத்தில் காட்சி.

குமாரவயலூர் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம்.

வள்ளியூர் முருகப்பெருமான் கோ ரதத்தில் உலா, இரவு பல்லக்கு சேவை.

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.

மேல்நோக்கு நாள்.

4-ந் தேதி (திங்கள்)

சிக்கல் சிங்கார வேலவர், வள்ளி- தெய்வானையை மணந்து இந்திர விமானத்தில் காட்சி தருதல்.

வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.

மேல்நோக்கு நாள்.

மேலும் செய்திகள்