சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

சீர்காழி சட்டைநாதர்கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர்.

Update: 2023-05-26 16:53 GMT

 சீர்காழி;

சீர்காழி சட்டைநாதர்கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர்.

குடமுழுக்கு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரருடன் அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இந்நிலையில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 24-ந் தேதி சீர்காழி சட்டைநாதர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது.விழாவை முன்னிட்டு திருநிலை நாயகி பிரம்மபுரீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

திருக்கல்யாணம்

இதை முன்னிட்டு பெண்கள் ஏராளமான பூக்கள், பழங்கள், தாலி சரடு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து யாகசாலை அருகில் வைத்தனர். அங்கு திருநிலை நாயகி பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தருமபுரம் ஆதீனம்முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்