ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசை: சுப்மன் கில் முன்னேற்றம்
தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.;
புதுடெல்லி,
ஒருநாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்திய வீரர் சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி தனது சிறந்த தரநிலையாக 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் விராட்கோலி ஒரு இடம் அதிகரித்து 6-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 8-வது இடத்தில் மாற்றமின்றி தொடருகிறார்.