உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு சரிவு
61.90 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தது.;
கவுகாத்தி,
கவுகாத்தியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே கொல்கத்தா டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா , இந்த வெற்றியால் தொடரை 2-0 என வென்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது .
இந்த நிலையில் , 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பாக 61.90 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தது. இப்போது இரு டெஸ்டிலும் தோற்றதால் இந்தியா 48.15 சதவீத புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது, ஆஸ்திரேலியா 100 சதவீத புள்ளியுடன் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது.