பள்ளி அணிகளுக்கான கால்பந்து: ஸ்பார்ட்டன்ஸ் வெற்றி
அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான கால்பந்து போட்டி சென்னை நந்தனத்தில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
சென்னை,
லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான கால்பந்து போட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் சிறுவர்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஒயிட் ஸ்பார்ட்டன்ஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் மஞ்சள் டைகர்ஸ் அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மஞ்சள் டைகர்சை வென்றது.
சிறுமிகள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் எவர் கிரீன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கிட்ஸ் எப்.சி.யை வீழ்த்தியது.