மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஒய்.பி.ஆர்.ஏ. அணி முதலிடம் பிடித்தது.
மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி
Published on

கரூர்,

ஐவர் கால்பந்து போட்டி

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி கரூர் மாவட்டம் தாந்தோணி மலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் கரூர், திருச்சி, தஞ்சை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நாக்-அவுட் முறையில் போட்டி நடைபெற்றது.

ஒய்.பி.ஆர்.ஏ. அணி வெற்றி

போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் உரத்த நாட்டை சேர்ந்த ஒய்.பி.ஆர்.ஏ. அணி 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் முதலிடத்தையும், நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த மெஜஸ்டிக் அணி 2-வது இடத்தையும், ஒய்.பி.ஆர்.பி. அணி 3-வது இடத்தையும், கரூர் டி.பி.எஸ்.எஸ். அணி 4-வது இடத்தையும் பெற்றன.

இதையடுத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளர் குமார் தலைமை தாங்கினார். யுனிவர்சல் விளையாட்டு குழு செயலாளர் சசிகுமார் மற்றும் மகேஷ்குமார், முருகானந்தம், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக டெக்ஸ் யுனைடெட் கால்பந்து அகடமி கழக தலைவர் ரமணன் வரவேற்றார். முடிவில் கவின் பாரதி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com