ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளா பிளாஸ்டர்ஸ் - மோகன் பகான் அணிகள் இன்று மோதல்

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

Update: 2024-03-13 03:29 GMT

Image Courtesy: @IndSuperLeague

மும்பை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - மோகன் பகான் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் மோகன் பகான் அணி 17 ஆட்டங்களில் ஆடி 11 வெற்றி, 3 டிரா, 2 தோல்வி கண்டு 36 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் கேரளா அணி 17 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 2 டிரா, 6 தோல்வி கண்டு 29 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்