பிரபல ஜெர்மனி கால்பந்து வீரர் ஓய்வு அறிவிப்பு

பிரபல ஜெர்மனி கால்பந்து வீரரான டோனி குரூஸ் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

Update: 2024-05-22 05:16 GMT

பெர்லின்,

பிரபல ஜெர்மனி கால்பந்து வீரர் டோனி குரூஸ். சர்வதேச போட்டியில் ஜெர்மனி அணிக்காக 108 ஆட்டங்களில் ஆடி 17 கோல்கள் அடித்துள்ளார். ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப்புக்காக 2014-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். அந்த கிளப் 22 பட்டங்கள் வெல்வதற்கு உதவிகரமாக இருந்துள்ளார்.

சிறந்த நடுகள வீரர்களில் ஒருவரான டோனி குரூஸ் ஜூன் மாதம் நடக்கும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்புடன் (யூரோ) கால்பந்தில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்