பெண்கள் ஆக்கி: ஜெர்மனி அணியிடம் பணிந்தது இந்தியா

இந்திய அணி இன்று நடைபெறும் ஆட்டத்தில் மீண்டும் ஜெர்மனியுடன் மோதுகிறது.

Update: 2023-07-18 21:29 GMT

வீஸ்பேடன், 

இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் சீனாவிடம் தோற்று இருந்த இந்திய அணி நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜெர்மனியை சந்தித்தது. தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்து ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. ஜெர்மனி அணி தரப்பில் நிக் லோரென்ஸ் (6-வது, 59-வது நிமிடம்), ஜெட்டி பிளெஸ்சுட்ஸ் (14-வது, 43-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இந்திய தரப்பில் விட்டால் பால்கி (29-வது நிமிடம்) ஒரு கோல் திருப்பினார்.

இந்திய அணி இன்று நடைபெறும் ஆட்டத்தில் மீண்டும் ஜெர்மனியுடன் மோதுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்