அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
இறுதிப்போட்டியில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின.;
image courtesy:twitter/@TheHockeyIndia
இபோ,
6 அணிகள் இடையிலான சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்றது. இதன் லீக் சுற்று முடிவில் பெல்ஜியம் (4 வெற்றி, ஒரு டிரா) 13 புள்ளிகளுடன் முதலிடமும், இந்தியா (4 வெற்றி, ஒரு தோல்வி) 12 புள்ளிகளுடன் 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. நியூசிலாந்து (7 புள்ளி), மலேசியா (4 புள்ளி), கனடா (4 புள்ளி), தென்கொரியா (3 புள்ளி) அணிகள் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தன.
இந்நிலையில் இந்த தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதின.
சம பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்திய அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இதனால் முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.