பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையை கொஞ்சும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்

இந்திய மகளிர் அணியினர் பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப்பின் குழந்தையுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.;

Update:2022-03-07 11:05 IST
மவுண்ட் மவுங்கானு,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து இந்திய மகளிர் அணியினர் பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மரூபின் 7 மாத குழந்தையை சந்திக்க சென்றனர். அவர்கள் அக்குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தனர். 

அவர்கள் பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப்பின் பெண் குழந்தையுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படமும், வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

போட்டியின் போது இரு அணிகளுக்கும் இடையே முரண்பாடு காணப்பட்டாலும், களத்திற்கு வெளியே இந்திய மகளிர் அணியினரின் இந்த செயல்பாடு கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்