"உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் ஒப்பந்தம் செய்யுங்கள், வழிதவற விடாதீர்கள்" - ரவி சாஸ்திரி

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உம்ரான் மாலிக் குறித்து பேசியுள்ளார்.

Update: 2022-05-18 12:45 GMT
Image Courtesy : BCCI / IPL
மும்பை,

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளராக அசத்தி வருபவர் உம்ரான் மாலிக். பிரமிக்க வைக்கும் வேகத்தில் பந்துவீசும் இவர் அதிரடி பேட்டிங் ஜாம்பவான்களுக்கு பந்துவீச்சில் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார்.

தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் இவர் அதிகபட்சமாக இந்த தொடரில் 157 கி.மீ வேகத்தில் பந்துவீசி வருகிறார். இவரை இந்திய அணியில் சேர்க்க சொல்லி பல முன்னணி வீரர்கள் ஆலோசனை சொல்லிவரும் நிலையில் தற்போது உம்ரான் மாலிக் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் ஒப்பந்தம் செய்யும்மாறு அவர் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், " அவரை உடனடியாக இந்திய அணியில் ஒப்பந்தம் செய்யுங்கள். முக்கிய வீரர்களுடன் அவரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஷமி மற்றும் பும்ரா போன்ற வீரர்களை சுற்றி அவர் இருக்க வேண்டும். அப்போது தான் அவரால் நிறைய விஷயங்களை கற்று கொள்ள முடியும். அவர்கள் பயிற்சி செய்யும் விதம், அவர்கள் தங்கள் பணிச்சுமையை நிர்வகிக்கும் விதம் ஆகியவற்றைப் உம்ரான் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அவரை வழிதவற விடாதீர்கள் " என சாஸ்திரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்