இன்றைய ராசிபலன் (13.01.2026): கடன் பிரச்சினை தீரும் ...!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;
இன்றைய பஞ்சாங்கம்:-
ஜனவரி 13
கிழமை: செவ்வாய்க்கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: மார்கழி
நாள்: 29
ஆங்கில தேதி: 13
மாதம்: ஜனவரி
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று முழுவதும் விசாகம்
திதி: இன்று மாலை 05-36 வரை தசமி பின்பு ஏகாதசி
யோகம் மரண, சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 10-30 to 11-00
நல்ல நேரம் மாலை: 4-30 - 5-30
ராகு காலம் பிற்பகல்: 3-00 - 4-30
எமகண்டம் காலை: 9-00 - 10-30
குளிகை காலை: 12-00 - 1-30
கௌரி நல்ல நேரம் காலை: 01-30 - 2-30
கௌரி நல்ல நேரம் மாலை: 7-30 - 8-30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: ரேவதி, அஸ்வினி
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
ரிஷபம்
பணப் புழக்கம் திருப்தி தரும். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். பிள்ளைகளின் உடல் நலம் தேறும். மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு ஆயத்தம் ஆவர். வியாபாரத்தில் விற்பனை கூடும். உத்யோகஸ்தர்களுக்கு மேலிடத்தில் மதிப்பு கூடும். ஜாதகம் செட்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மிதுனம்
வியாபாரத்தில் வேலையாட்கள் மீது கவனம் தேவை. எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். தம்பதிகளின் மனஸ்தாபம் நீங்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். காதல் மலரும். பெண்கள் சேமிப்பினை துவங்குவர். மாதவிடாய் பிரச்சினை தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கடகம்
நிர்வாகத் திறன் பளிச்சிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரிப்பது நல்லது. வீட்டில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
சிம்மம்
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தலையீடு உண்டு. உங்கள் செயலில் உற்சாகம் வெளிப்படும். வியாபாரம் லாபகரமாக செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
வியாபாரத்தில் வளர்ச்சி கூடும்.மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். பந்தங்கள் வீடு தேடி வந்து அன்பு பாராட்டுவர். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளுக்கு விரும்பிய நாட்டில் நினைத்த வேலை கிடைக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
துலாம்
உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலம் பளிச்சிடும். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். மாணவர்கள் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உடல் உஷ்ணமாகும். அதற்கேற்ற வகையில் உணவினை உட்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
விருச்சிகம்
அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் தாங்களே முடிவெடுத்துச் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. மாணவர்கள் உயர் படிப்பு படிக்க வெளிநாடு செல்வர்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
தனுசு
வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். சுப காரியங்கள் கை கூடும். வெளிநாட்டுச் செய்தி மகிழ்ச்சி தரும். கொடுக்கல்–வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கிவிடுவர்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மகரம்
குடும்பப் பிரச்சினை சீராகும். கணவர்வழியில் உதவிகள் உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு வேலை சுமை குறையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பங்குச் சந்தை லாபம் தரும். காதலர்கள் சிந்திப்பது நல்லது. குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கும்பம்
தங்கள் நீண்ட நாள் கனவு பலிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சினை தீரும். தேக ஆரோக்கியம் சிறக்கும். பிரிந்தவர் ஒன்று சேருவர். சேமிப்பில் கவனம் தேவை. தாமதித்த பணம் கைக்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மீனம்
பெரியர்களின் ஆசி கிட்டும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கணவரிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். தேகம் சிறப்படையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு