இன்றைய ராசிபலன் (11-12-2025): சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2025-12-11 06:23 IST

இன்றைய பஞ்சாங்கம்

கிழமை: வியாழக்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: கார்த்திகை

நாள்: 25

ஆங்கில தேதி: 11

மாதம்: டிசம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று காலை 08-44 வரை மகம் பின்பு பூரம்

திதி: இன்று மாலை 07-43 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 10-45 to 11-45

ராகு காலம்: பிற்பகல் 1-30 to 3-00

எமகண்டம்: காலை 6-00 to 7-30

குளிகை: காலை 9-00 to 10-30

கௌரி நல்ல நேரம்: காலை 12-15 to 1-15

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டமம்: திருவோணம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்த வரன் அமையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

ரிஷபம்

மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். வீட்டினை அழகாக கட்டிமுடிப்பீர்கள். குடும்பத்தில் வெளிநபரின் தலையீடு வேண்டாம். வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார். பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

தம்பதிகளின் கனவு நனவாகும். அத்தியாவசிய தேவை நிறைவேறும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதியான போக்கே நிலவும். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கடகம்

ஆரோக்கியம் மேம்படும். பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு தங்களின் திருமண கனவு நிறைவேறும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

பெண்களின் சேமிப்புஉயரும். கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். திடீர் பணவரவு உண்டு. தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும்.வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் வேலை பளு குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . மனைவிவழியில் உதவிகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாப்பக்கம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

துலாம்

விரும்பியவரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். உடல் நலம் பலம் பெறும். தம்பதிகளிடத்தில் நல்ல புரிதல் உண்டாகும். மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

விருச்சிகம்

உத்யோகஸ்தர்ளுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். மருத்துவ செலவு உண்டு. உறவினர் உதவுவர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

வியாபாரத்திற்கு வங்கிக்கடன் கிடைக்கும். ஆன்மீகப் பணிகள் சிறக்கும்.காசி, கயா என தீர்க்க யாத்திரை செல்வதற்கு திட்டமிடுவர். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். உறவினர்களால் நன்மை உண்டாகும். பொதுத் துறையில் இருப்பவருக்கு தங்கள் சொல்லிற்கு மதிப்புக் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கும்பம்

வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். கையிருப்பு அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மீனம்

காதலர்கள் தங்கள் கடமையை உணர்வது நல்லது. உடல் நலம் நன்றாக இருக்கும். தாமதமான சுபகாரியம் நடந்தேறும். பணம் தாராளமாக வரும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்




 


Tags:    

மேலும் செய்திகள்