மொரீசியஸ் பிரதமர் ராம்கூலம் 9-ந்தேதி இந்தியா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025
மொரீசியஸ் பிரதமர் ராம்கூலம் 9-ந்தேதி இந்தியா வருகை
மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் வருகிற 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 8 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த பயணத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசுகிறார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்து மூலோபாய நட்புறவை இன்னும் கூடுதலாக மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வார்.
இந்த பயணத்தில் மும்பை, வாரணாசி, அயோத்தியா மற்றும் திருப்பதி போன்ற நகரங்களுக்கு அவர் செல்ல உள்ளார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. மும்பையில் அவர் வர்த்தக நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்கிறார்.
Update: 2025-09-06 04:43 GMT