தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-09-2025

தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன் தினம் ஒரு சவரன் ரூ.80,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கிராமுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.5 ஆயிரம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ. 280 குறைந்து, ஒரு சவரன் ரூ.79,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.9,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.137க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2025-09-08 04:52 GMT

Linked news