தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.137க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந்தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அதிலும் கடந்த மாதம் 29-ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை இருந்தது. அந்த வகையில் கடந்த 4-ந்தேதி வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை தாண்டியது.
நேற்று முன் தினம் இதுவரை இல்லாத வகையில், வரலாற்றில் முதல் முறையாக ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்தை கடந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தை கடந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன் தினம் ஒரு சவரன் ரூ.80,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.5 ஆயிரம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ. 280 குறைந்து, ஒரு சவரன் ரூ.79,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.9,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.137க்கு விற்பனை செய்யப்படுகிறது.






