மதிமுகவில் இருந்து நீக்கம்: அடுத்த வாரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-09-2025
மதிமுகவில் இருந்து நீக்கம்: அடுத்த வாரம் ஆதரவாளர்களை சந்திக்கும் மல்லை சத்யா
மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மல்லை சத்யா, ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார். என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். துரை வைகோ வருகைக்குப்பின் மதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது. தனது மகன் துரை வைகோ குறித்தே வைகோ சிந்திக்கிறார். ஆதரவாளர்களை அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்தித்து ஜனநாயகபூர்வமாக பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
Update: 2025-09-08 05:29 GMT