நயன்தாராவின் ஆவணப் படத்துக்கு மீண்டும்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025

நயன்தாராவின் ஆவணப் படத்துக்கு மீண்டும் சிக்கல்!


நடிகை நயன்தாராவின் ஆவணப் படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்தத் தடை கோரி ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை ஐகோட்ர்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில் சந்திரமுகி காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், மேலும் அதன்மூலம் கிடைத்த லாபத்திலிருந்து ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் முடிவில், இந்த வழக்கு தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-09-10 07:56 GMT

Linked news