'அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை' -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025

'அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை' - வழக்கறிஞர் பாலு

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை என அன்புமணி ராமதாஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ம.க. செய்தித்தொடர்பாளர் பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாமக விதிகளின்படி ராமதாஸின் அறிவிப்பு செல்லாது. தேர்தல் ஆணையத்திலும் பாமகவின் தலைவர் என அன்புமணி பெயர்தான் உள்ளது. கட்சியின் நிறுவனராக ராமதாஸ் தொடர்கிறார். அதில் மாற்றம் இல்லை. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணியின் தலைவர் பதவி உள்ளது. எதிர்க்கட்சி என்ற பணியை ஆக்கப்பூர்வமாக செய்து வருகிறார் அன்புமணி

இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2025-09-11 07:35 GMT

Linked news