பிரதமர் மோடி பிறந்தநாள்: ராகுல் காந்தி, பினராயி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
பிரதமர் மோடி பிறந்தநாள்: ராகுல் காந்தி, பினராயி விஜயன் வாழ்த்து
பிரதமர் மோடி தனது 75-வது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறார். பா.ஜனதாவை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் சக்தியாக புதிய உச்சத்துக்கு கொண்டு சென்ற தலைவரான மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளனர். இதையொட்டி பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Update: 2025-09-17 04:59 GMT