பிரதமர் மோடி பிறந்தநாள்: ராகுல் காந்தி, பினராயி விஜயன் வாழ்த்து


பிரதமர் மோடி பிறந்தநாள்: ராகுல் காந்தி, பினராயி விஜயன் வாழ்த்து
x
தினத்தந்தி 17 Sept 2025 10:07 AM IST (Updated: 17 Sept 2025 11:08 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

புதுடெல்லி.

பிரதமர் மோடி தனது 75-வது பிறந்தநாளை இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறார். பா.ஜனதாவை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் சக்தியாக புதிய உச்சத்துக்கு கொண்டு சென்ற தலைவரான மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளனர். இதையொட்டி பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைத்திட வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story