ஐ.ஐ.டி. காரக்பூர்: பிஎச்.டி. மாணவர் தற்கொலை;... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
ஐ.ஐ.டி. காரக்பூர்: பிஎச்.டி. மாணவர் தற்கொலை; ஓராண்டில் 6-வது மரணம்
மேற்கு வங்காளத்தில் உள்ள ஐ.ஐ.டி. காரக்பூரில் ஹர்ஷ்குமார் பாண்டே (வயது 27) என்பவர் ஆராய்ச்சி படிப்பை படித்து வந்திருக்கிறார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் முனைவர் (பிஎச்.டி.) படிப்பை படித்து வந்த நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் அவருடைய தந்தை மனோஜ் குமார் பாண்டே தொலைபேசி வழியே மகன் பாண்டேவை தொடர்பு கொண்டிருக்கிறார்.
ஆனால், அவருடன் பேச முடியவில்லை. இதனால், ஐ.ஐ.டி.யின் பாதுகாவலர்களை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர்கள் பாண்டேவின் அறைக்கு சென்றபோது. அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்துள்ளது. உடனடியாக ஹிஜ்லி போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது. தூக்கு போட்ட நிலையில் பாண்டே கண்டெடுக்கப்பட்டார்.
Update: 2025-09-21 04:26 GMT