சினிமா கவர்ச்சியால் கூட்டம் கூடும்: விஜய்க்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

சினிமா கவர்ச்சியால் கூட்டம் கூடும்: விஜய்க்கு துணிச்சல் இல்லை: ஆளூர் ஷாநவாஸ்


விசிக நிர்வாகி ஆளூர் ஷாநவாஸ் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பத்திரிகையாளர்களை சந்திக்க தலைவர் விஜய்க்கு துணிச்சல் இல்லை. ஆளுநர் ரவி, அண்ணாமலை இடத்தை விஜய் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. நாகை தொடர்பாக விஜய் பேசியதில் எனது ஒரு கேள்விக்கு பதிலளிக்கட்டும்.

நடிகராக விஜய் நாகை வந்தாலே அவருக்கு இவ்வளவு கூட்டம் கூடும். விஜய்யின் புகழ் என்பது சினிமாவின் மூலம் கிடைக்கக்கூடிய புகழ். நாகையில் முழுக்க முழுக்க பொய்த்தகவல்களை பரப்பிவிட்டு சென்றுள்ளார். இப்படியே போனால் விஜய் மக்களால் நிராகரிக்கப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Update: 2025-09-21 07:18 GMT

Linked news