காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைகனமழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025
காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்று (அக்.21) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 21-.10-2025 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தங்கள் கிராமங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்களுக்கு தகவல் தெரியும் பொருட்டு இதனை உரிய வகையில் அறிவிப்பு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Update: 2025-10-21 09:58 GMT