திமுகவை வீழ்த்த விஜய் அதிமுகவுடன் சேர வேண்டும் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025

திமுகவை வீழ்த்த விஜய் அதிமுகவுடன் சேர வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்

இன்றைக்கு ஸ்டாலின் கூட்டணி பலத்தில் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளார். இன்றைக்கு தி.மு.க.வை வீழ்த்தும் சக்திகள் எடப்பாடியாரின் பின்னால் அனைவரும் அணி திரண்டு வரவேண்டும். நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். இல்லை என்றால் முடிவு வேறு விதமாக அமைந்து விடும். ஆந்திராவில் சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி சரியாக முடிவெடுக்கவில்லை. ஆனால் பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து இன்றைக்கு துணை முதல்-அமைச்சராகி உள்ளார். விஜய் நல்ல முடிவை எடுப்பார் என்று மக்களும், அவரது தொண்டர்களும் உள்ளார்கள். இந்த வாய்ப்பை அவர் நழுவவிடக்கூடாது.

Update: 2025-10-21 11:37 GMT

Linked news