மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்: அன்புமணி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026

மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்: அன்புமணி ராமதாஸ்

அன்னைத் தமிழுக்காக துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் சுமந்தும், குண்டாந்தடிகளால் தாக்குதலுக்கு ஆளாகியும். சிறைக் கொட்டடிகளில் நோய்வாய்ப்பட்டும் தங்களின் இன்னுயிரை ஈந்தது உள்ளிட்ட மொழிப்போர் ஈகியர்களை நினைவு கூறும் வகையில் மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவர்கள் செய்த ஈகங்களை போற்றி வீரவணக்கம் செலுத்துகிறேன். எந்த நோக்கத்திற்காக அவர்கள் தங்களின் உயிர்களை ஈகம் செய்தார்களோ, அந்த நோக்கத்தை அடைவதற்காக தொடர்ந்து போராட நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என்று அன்புமணி கூறியுள்ளார்.

Update: 2026-01-25 05:49 GMT

Linked news