35 இந்திய மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 03-11-2025
35 இந்திய மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என கூறி மீனவர்கள் 35 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப்படகு ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். நாட்டுப்படகில் இருந்த 4 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் இருந்த 31 பேர் என மொத்தம் 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.
Update: 2025-11-03 04:26 GMT