இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 03-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-11-03 09:48 IST


Live Updates
2025-11-03 14:09 GMT

Zeptoவில் இலவச டெலிவரிக்கான குறைந்தபட்ச ஆர்டர் தொகை, ரூ. 199ல் இருந்து ரூ.99ஆகக் குறைத்துள்ளது. ரூ.99க்கு குறைவான ஆர்டர்களுக்கு மட்டும், டெலிவரி கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

2025-11-03 14:07 GMT

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம். வாக்காளர் பட்டியலில் வீட்டு எண்ணின்படி வாக்காளர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். ஒரே கதவு எண்ணில் வசிக்கும் வாக்காளர்களை பிரிக்காமல் ஒரே பாகத்தில் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

2025-11-03 13:42 GMT

டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக்கோளாறால் மங்கோலியாவில் தரையிறக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. நடுவானில் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த ஊழியர்கள், விமானத்தை பத்திரமாக மங்கோலியாவில் தரையிறக்கினர். உலாண்பாத்தரில் தரையிறக்கப்பட்டு, விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

2025-11-03 13:07 GMT

சென்னை, பூவிருந்தவல்லி, நசரத்பேட்ட, காட்டுப்பாக்கம், கரையான்சாவடி, மாங்காடு, ஆவடி, திருமுல்லைவாயில், பருத்திப்பட்டு, சென்னீர்குப்பம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்துள்ளது.

2025-11-03 12:59 GMT

கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

2025-11-03 12:07 GMT

சென்னை ஈசி ஆர் சாலையில் புல்லட் மீது அதிவேகமாக சென்ற பென்ஸ் கார் மோதி ஒருவர் உயிரிழந்தார். காரில் சென்ற 2 இளைஞர்களும் போதையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் போதை இளைஞர்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

2025-11-03 11:15 GMT

பிரதமர் மோடி அவமதிப்பு அமைச்சகம்' என்ற ஒரு புதிய அமைச்சகத்தை உருவாக்கலாம். அதில்தான், அவரும் அவரது அரசும் அதிக கவனம் செலுத்துகின்றன. பீகாரின் வளர்ச்சி பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் பீகாரை அவமதிப்பதாக தேவையற்ற குற்றச்சாட்டுகளை பேசுகிறார் பிரதமர் மோடி என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கூறியுள்ளார். 

2025-11-03 11:11 GMT

எகிப்தில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த உலகின் மிகப்பெரிய தொல்பொருள் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. எகிப்தின் பழங்கால மன்னர்களின் சிலைகள், கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலைப்பொருட்கள், பிரமிடுகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. மன்னர் டுட்டன்காமுன் கல்லறையும், கிசா பிரமிடின் மாதிரியும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

2025-11-03 10:35 GMT

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் அண்ணாமலையையும் விசாரிக்க கோரி எம்.எல்.ரவி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அண்ணாமலையை விசாரிக்க கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.

2025-11-03 10:09 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத கிரிவலம் மேற்கொள்ள உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதி இரவு 9.45 முதல் மறுநாள் புதன்கிழமை இரவு 7.29 வரை கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்