தெரு நாய்கள் வழக்கு: 7ம் தேதி தீர்ப்பளிக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 03-11-2025

தெரு நாய்கள் வழக்கு: 7ம் தேதி தீர்ப்பளிக்கும் சுப்ரீம் கோர்ட்டு

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் பல்வேறு மாநில தலைமை செயலாளர்கள் இன்று நேரில் ஆஜராகினர். அதன்பின்னர் மாநில அரசுகள் சார்பில் பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, அனைத்து பிரமாண பத்திரங்களையும் ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், மாநில அரசுகள் சார்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தெரு நாய்கள் வழக்கில் வரும் 7ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் ஆஜராக தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2025-11-03 07:47 GMT

Linked news