மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, கோவிலில் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்ய இருந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2025-10-04 11:22 GMT

Linked news