விஜய் கட்சியோடு காங்கிரஸ் கூட்டணியா? -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
விஜய் கட்சியோடு காங்கிரஸ் கூட்டணியா? - கே.எஸ்.அழகிரி விளக்கம்
காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ராகுல் காந்தி தேசிய தலைவர். ராகுல் காந்திக்கு விஜய்யுடன் நீண்ட காலமாகவே தனிப்பட்ட முறையில் பழக்கம் உள்ளது: அதன் அடிப்படையில் விஜய்யோடு ராகுல் காந்தி பேசியிருப்பார். அதற்காகவெல்லாம் விஜய்யோடு காங்கிரஸ் கூட்டு சேரும் என சொல்ல முடியாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ராகுலுக்கு நெருங்கிய நண்பர் என்பதனால் இருதரப்பிலும் ராகுல் பேசினார். எந்த சூழலிலும் திமுக உடனான காங்கிரஸ் கூட்டணி உடையாது" என்று கூறினார்.
Update: 2025-10-04 13:33 GMT