திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திமுக:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
செங்கல்பட்டு மறைமலைநகரில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
திராவிடர் கழகத்தினர் அனைவருக்கும் எனது சல்யூட். கலைஞர், பேராசிரியருக்கு பிறகு என்னை வழிநடத்துபவர் கி.வீரமணி. திராவிடர் கழகத்திற்கு எதிராக தொடங்கியது அல்ல திமுக; திராவிடர் கழகத்தின் நீட்சி தான் திமுக. 92 வயதிலும் இளைஞர் போல வீரமணி ஊர் ஊராக பரப்புரை செய்கிறார். அவதூறுகளுக்கு பதில் தருகிறார். உங்கள் பணி சுமையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பெரியாரின் சிந்தனைகளை அவர் வாழும் காலத்திலேயே நிறைவேற்றியது திமுக. இவ்வாறு அவர் கூறினார்.
Update: 2025-10-04 14:46 GMT