பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி - மு.க.ஸ்டாலின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆகிய இருவருக்கும் தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது துணைப் பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்து வந்த திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்படுகிறார். திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக கே.ஈஸ்வரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்ததாக, வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு என்று இரண்டு மாவட்டக் கழகங்களாக திமுக பிரித்துள்ளது. இதையடுத்து வேலூர் தெற்கு (வேலூர் அணைக்கட்டு, குடியாத்தம்) மாவட்ட செயலாளராக ஏ.பி.நந்தக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் வடக்கு (காட்பாடி, கீழ்வைத்தியாணான்குப்பம்) மாவட்ட செயலாலராக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நியமிக்கப்படுகிறார்.