உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுடன் கலகலப்பாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுடன் கலகலப்பாக உரையாடிய பிரதமர் மோடி
சமீபத்தில் நவிமும்பையில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. புதிய வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகள் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, கோப்பையை பிரதமரிடம் கொடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தன்னை சந்தித்த இந்திய அணி வீராங்கனைகளுக்கு தன் கைப்பட லட்டு வழங்கி பிரதமர் மோடி மகிழ்வித்தார்.
Update: 2025-11-06 09:53 GMT