20 வருடம் என்பது நீண்ட காலம்; ரொட்டியை திருப்பி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
20 வருடம் என்பது நீண்ட காலம்; ரொட்டியை திருப்பி போடுங்கள் - லாலு பிரசாத் சூசகம்
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் சென்று வாக்கு சாவடியில் இன்று வாக்குப்பதிவு செய்து விட்டு திரும்பினார். அவர் குடும்பத்தினருடன் வாக்கை செலுத்தி விட்டு. அதற்கான சான்றாக கை விரலில் உள்ள அழியாத மையை செய்தியாளர்களிடம் காட்டினார்.
Update: 2025-11-06 10:39 GMT