காலில் அணியவேண்டியதை கையில் அணிந்தபோதே... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
காலில் அணியவேண்டியதை கையில் அணிந்தபோதே அறிவழிந்துபோனார்: வக்கீலுக்கு வைரமுத்து கண்டனம்
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம்போல் கூடியது. வழக்குகளின் விவரத்தை வக்கீல்கள் குறிப்பிடுவதை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு வக்கீல், நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கினார். தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட காவலாளிகள், அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Update: 2025-10-07 04:20 GMT